1000 கோடி ஊழலை கண்டுபிடித்த நேர்மையான அதிகாரி C., உமாசங்கர் IAS அவர்கள் பழிவாங்கப்படுவதை கண்டித்து மாபெரும் ஜனநாயக மீட்சிக் கூட்டம்
நாள் :12.08.2010(வியாழன்)
நேரம் :மாலை 5.00 மணி
இடம் :கேரள சமாஜம்
கருத்துரை :
திரு . R. நல்லகண்ணு CPI,
திரு G. ராமகிருஷ்ணன் - CPM ,
திரு. தமிழருவி மணியன், காந்திய மக்கள் இயக்கம்,
திருமதி ப. சிவகாமி IAS(Retd) தலைவர், சமூக சமத்துவ படை,
திரு. M. G.தேவசகாயம் IAS(Retd),
திரு. K. பாண்டியராஜன் MAFOI CONSULTANCY.
திரு. A.S. குமார் CPI(ML)
பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள்
நாள் :12.08.2010(வியாழன்)
நேரம் :மாலை 5.00 மணி
இடம் :கேரள சமாஜம்
கருத்துரை :
பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள்
700கோடி ETL ஊழல் தொடர்பாகவும், 300 கோடி முதலீடு செய்யப்பட்ட அரசு கேபிள் டிவியை கிரிமினல் நடவடிக்கைகள் மூலம் முடக்கிய எஸ்.சி.வி நிறுவனத்தின்(சன் டிவி குழுமம்) அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாகியுள்ள ஆவணங்கள்:
Click here to download ALL documents related to 1000cr scam exposed by Umashankar.IAS
Complaint against TN Government filed by C Umashankar before National Commission for SC
பத்திரிகை செய்திகள் - ஜூலை 27, 2010 : THE HINDU || DECCAN CHRONICLE || DECCAN CHRONICLE 1 || INDIAN EXPRESS ||TIMES OF INDIA
700 கோடி ETL ஊழல் வழக்கு விவரங்கள்:
மக்கள் வரிப்பணம் 300 கோடி அரசு கேபிள் டிவியில் விரயம் - அ.கே.டிவியை முடக்க
4. அரசு கேபிள் டிவியை முடக்க எஸ்.சி.வி.யின் கிரிமினல் வேலைகள் -SCV's(owned by Sun Group, Maran brothers) Criminal activities to damage the Arasu(Govt.) Cable TV - விரிவாக படிக்க
5. எஸ்.சி.வி. ஐ - நாட்டுடமை ஆக்கப் பரிந்துரைக்கும் ஆவணம் - Documents recommending to Nationalize SCV
ஆர்ப்பாட்டம்...
ஊழலை அம்பலப்படுத்தியதால் தமிழக அரசால் பழிவாங்கப்படும் உமாசங்கர்.ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் - ரூ.1000கோடி முறைகேட்டிற்குத் துணைபோன தமிழக அரசைக் கண்டித்தும், ஆர்ப்பாட்டம்...
இடம் : பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை
நாள்/ நேரம்: 25-07-2010(ஞாயிறு) காலை 10.30

ஜீலை 2010: நேர்மையான அதிகாரி உமாசங்கர்.ஐ.ஏ.எஸ் பழிவாங்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் சக்தி கட்சி ஆர்ப்பாட்டம் - கல்கி இதழ் செய்தி... பக்கம் 1 || பக்கம் 2
மக்கள் வரிப்பணம் ரூ.1000கோடி காணவில்லை !
கண்டுபிடித்தால் தண்டணை !!
அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளால் தினம் தினம் அநியாயங்களும்,அட்டூழியங்களும்,ஊழலும் நடத்தப்பட்டு வருவது கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர். மக்களின் கோபத்தைக் அலட்சியம் செய்யும் ஆட்சியாளர்களின் ஊழல் சரித்திரம் தொடர்கதையாகியுள்ளது. இதோ நம் வரி ப்பணம் 1000கோடி விரயமாக்கப்பட்ட விதத்தைப் படியுங்கள்... விரயமாக்கியவர் யார்?..கண்டுபிடித்தவர் யார்? தண்டனை பெற்றவர் யார் என்பது புரியும்.
குடும்பத் தகராறால் ரூ.300 கோடி விரயம்:
"குறைந்தவிலையில்,உயர்ந்த தரம் வாய்ந்த கேபிள் டிவி இணைப்பு கொடுப்பதற்கு" என்று மக்களின் காதில் பூசுற்றி துவங்கப்பட்ட நிறுவனம்தான் அரசு-கேபிள் டி.வி. உண்மையில், ஆளுங்கட்சித் தலைவரின் வாரிசுகளுக்கு இடையே நடந்த அதிகாரப்போட்டியின் விளைவுதான் அரசு-கேபிள் டி.வி. ஆகஸ்ட் 2007ல் துவங்கப்பட்ட அரசு-கேபிள் டி.வி, ஜுலை 2008ல் ஒளிபரப்பைத் துவங்கியது. மிகவிரைவாக அதிகாரபூர்வமில்லாத மூடுவிழாவைக் கண்டது. குடும்பத் தகராறு தீர்ந்துவிட்டது. அரசுகேபிள் டிவிக்கு அவசியமில்லாமல் போய்விட்டது. குடும்பத் தகராறால் அரசு கேபிள் டிவியில் விரயமாக்கப்பட்ட மக்கள்வரிப் பணம் ரூ.300கோடி !!
தனியாரின் கைக்குப்போன அரசின் சொத்து ரூ.700கோடி:
அரசுநிறுவனமான எல்காட்(ELCOT) தனியாருடன் இணைந்து உருவாக்கியதுதான் "எல்நெட் சாப்ட்வேர் கம்பெனி(தரமணி, டைடல் பார்க்கில் உள்ளது)". இந்த எல்நெட் நிறுவனம், ETL என்ற துணை நிறுவனம் ஒன்றை நிறுவுகிறது. எப்படி? கோடிக்கணக்கில் அரசுப் பணத்தை செலவழித்து நிலம்வாங்கி, அரசின் சொத்துகளை ரூ.81கோடிக்கு அடமானம் வைத்துத்தான். பழைய மகாபலிபுர சாலையில் உள்ள இந்நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ.700கோடி. இந்த நிறுவனம் தற்போது முழுக்க முழுக்க தனியார் ஒருவரின் சொத்தாகிவிட்டது. இதனால் களவுபோன மக்கள்வரிப்பணம் ரூ.700கோடி !!
ஊழலை கண்டுபிடித்ததால் தண்டிக்கப்பட்ட அதிகாரி:
எல்காட்,அரசு கேபிள் டி.வி யில் மேலாண் இயக்குனராகப் பணியாற்றிய ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி , மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் இந்த நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்,முறைகேடுகளைத் தட்டிக்கேட்டார். ஆதாரப்பூர்வமாக ஊழலை அம்பலப்படுத்தினார். கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றிய அத்தனை இடங்களிலும் நேர்மையாக,மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர் இவர். ஊழலுக்கு உடன்படாத இவரின் நேர்மைக்குக் கிடைத்த பரிசுகள் என்ன தெரியுமா? தொடர்ச்சியான பணிமாற்றம்(Transfer), வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தார் என்று பொய்யான விசாரணை, பதவி உயர்வுக்குத் தடை !
மடியில் கணமில் லாததால், அரசின் மிரட்டலுக்கு அஞ்சவில்லை இவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து எல்காட்,அரசு கேபிள் டி.வியில் நடைபெற்ற ரூ.1000கோடி ஊழலை 150பக்க ஆவணத்தின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார் !! (ஆவணங்களைப் படிக்க www.makkalsakthi.net)
அரசு,பொதுமக்கள் நலன் கருதி அவர் எடுத்த நேர்மையான நடவடிக்கைகளுக்காக இன்று நீதிமன்றத்தின் படியேறி தன்னை நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
திரு.உமாசங்கர்.ஐ.ஏ.எஸ் :
மாவட்ட ஆட்சியராக இருந்தபோது(99-01) திருவாரூரை இந்தியாவின் கம்யூட்டர் மயமாக்கப்பட்ட முதல் மாவட்டமாக்கிய திரு.உமாசங்கர்.ஐ.ஏ.எஸ் அவர்கள்தான், நேர்மைக்காக தண்டிக்கப்பட்ட அதிகாரி. ஐ.ஏ.எஸ் போன்ற உயர் அதிகாரப் பணிகளில் உள்ளவருக்கே இந்த நிலை என்றால்,எந்த செல்வாக்கும் இல்லாத சாமானியனுக்கு எப்படி கிடைக்கும் நீதி !!? நேர்மையான ஒருசில அதிகாரிகளும் இப்படி தண்டிக்கப்படும்போது, மற்றவர்கள் ஊழல்,முறைகேடுகளை எதிர்த்து நிற்க எப்படி முன்வருவார்கள்?
சி.பி.ஐ.விசாரணை:
அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அரசைக் கண்டிப்பது மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசியல் கட்சியின் கடமையாகும். சம்பந்தப்பட்ட துறைகளின் இயக்குனராகப் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரியே, ஆதாரப்பூர்வமாக அரசின் ஆயிரம் கோடி ஊழலை அம்பலப்படுத்தியுள்ளார், சி.பி.ஐ.விசாரணைக்கும் பரிந்துரைத்துள்ளார்(ஆகஸ்ட் 2008ல்). இதுவரை நடவடிக்கை இல்லை. ஆகவே, இந்த ஊழலின் பின்னணியைக் கண்டறிய சி.பி.ஐ.விசார ணை செய்ய வலியுறுத்தி மக்கள் சக்தி கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயம் கொள்ளல் ஆகாது பாப்பா !! மோதி மிதித்துவிடு பாப்பா !! என்றார் பாரதியார். இது.. பாப்பாவுக்கு மட்டுமல்ல.. நாட்டின் நலனில் அக்கறையுள்ள நமக்கும்தான்.
ரூ.1000கோடி ஊழலுக்குத் துணைபோன தமிழக அரசைக் கண்டித்தும்,
ஊழலை விசாரிக்க சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும்
ஊழலை அம்பலப்படுத்தியதால் திரு.உமாசங்கர்.ஐ.ஏ.எஸ் அவர்களை பழிவாங்கும் தமிழக அரசின் போக்கைக் கண்டித்தும்
கண்டன ஆர்ப்பாட்டம்...
25-07-2010(ஞாயிறு) காலை 10.30, பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை
சிறுமை கண்டு பொங்குவாய் வா..வா..வா...
மக்கள் சக்தி கட்சி
41,பஜார் லேன், சைதாப்பேட்டை, சென்னை-15
www.makkalsakthi.net ,
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
9150040091 / 92 / 95
தகவல் ஆதாரம்: திரு.உமாசங்கர் ஐ.ஏ.எஸ்(எல்காட்,அரசு கேபிள் டி.வி முன்னாள் நிர்வாக இயக்குனர்) அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்குப்பத்திரம்(Affidavit)
குறிப்பு : ஜூன் 20 ஆம் தேதி இந்த போராட்டத்திற்கு அனுமதி அளித்த காவல்துறை ஜூன் 19 இரவு நம்மை அழைத்து உலகத் தமிழ் மாநாடு நடக்கும் இச்சமயத்தில் வேண்டாம் என உயரதிகாரிகள் எண்ணுகிறார்கள் என கொடுத்த அனுமதியை மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய ஆவணங்கள் - சி.பி.ஐ. விசாரணை கோரி தலைமை செயலருக்கு கடிதம்
MSK TEAM With Dr.JP
மக்கள் சக்தி கட்சி - லோக்சத்தா கட்சியின் தமிழ்நாட்டு அங்கம்...
ஜீலை 2010
மக்கள் சக்தி கட்சி, ஆந்திராவில் 2006ல் துவக்கப்பட்ட லோக்சத்தா கட்சியின் தமிழ்நாட்டு அங்கமாக உருமாற்றம் பெறுகிறது.
மக்கள் சக்தி கட்சியின் மாநில தலைமைக்குழுவின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விரிவாய் விவாதிப்பதற்கு 8 பேர் கொண்ட மாநில தலைமைக்குழு கடந்த ஜீன் 29,30 தேதிகளில் லோக்சத்தா கட்சியின் தேசியத்தலைவர் டாக்டர்.ஜெயப்பிரகாஷ் நாராயணனைச் சந்தித்தது.( படங்கள் : http://picasaweb.google.co.in/makkalsakthikatchi/MSKLSPMergerDiscussionWithDrJPInHydJune29302010#)
ம.ச.க. என்ற பெயர் அப்படியே தொடரப்படும் என்றும் இந்த இணைப்பு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, கூட்டம் ஆகஸ்ட் 2010ல் நடத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
லோக்சத்தா கட்சி பற்றி விரிவாய் அறிந்து கொள்ள
லோக்சத்தா நிறுவனர்,தேசியத் தலைவர் டாக்டர்.ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களைப் பற்றி விரிவாய் அறிந்துகொள்ள:
http://en.wikipedia.org/wiki/Jayaprakash_Narayan_(Lok_Satta)
http://loksatta.org/cms/index.php?option=com_content&view=article&id=87&Itemid=60
http://www.youtube.com/user/peopleforloksatta#g/u
ம.ச.க இணைப்பு குறித்து லோக்சத்தா கட்சியால் ஆந்திராவில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தி ( இது ஹிந்து பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது)
Lok Satta gains strength in Tamil Nadu
Posted: 29 Jun 2010 05:16 AM PDT
The Makkal Shakthi Katchi (meaning party of people’s power) has decided to function as the Lok Satta Party unit in Tamil Nadu.
An eight-member delegation, comprising members of the party’s Steering Committee, called on Lok Satta Party President Dr. Jayaprakash Narayan at the Lok Satta Party headquarters here and discussed modalities for taking the party forward.
Most of the one-year-old Makkal Shakthi Katchi members had been active in Makkal Shakthi Iyakkam founded by Mr. Udaya Murthy in 1988. They came out of the movement and founded the political party. They even contested in three by-elections to the Tamil Nadu Assembly in the last one year.
The delegation comprised Messrs Senthil Arumugam, Prabhakar, Uday Kumar, Shiva Shankar, Shiva Ilango, Satish, Sathyaraj and Mohan.
According to Mr. Senthil, the Makkal Shakthi Katchi will hereafter be the Lok Satta’s Tamil Nadu unit.
எஸ்.சி.வியின் கிரிமினல் நடவடிக்கைகள்
:


