
நாள் & நேரம் : மார்ச் 07, 2010 - ஞாயிறு அன்று காலை 11 மணி
இடம் : மெமோரியல் ஹால் (சென்ட்ரல் அருகில்)
- ஓட்டுப்போட்டவர்களை ஏமாற்றிவிட்டு கட்சி தாவும் M.L.A.க்கள்
- தேர்தல் களத்தில் ஜாதி,வாரிசுகளின் ஆதிக்கம்; ஓட்டுக்குப் பணம்
- 10,+2 வகுப்பு மாணவர்களின் தேர்வுகளுக்கு இடையூறாக இருக்கும் பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளிவைக்காதது;
- திரைப்பட நடிகர் அஜீத்தின் துணிவான கருத்துக்கும், அதை ஆதரித்த முன்னணி நடிகர் ரஜினிகாந்தை எதிர்த்தும், ஆதிக்கக் கட்சி ஆதரவு சங்கங்களின் கருத்துரிமைக்கு எதிரான அச்சுறுத்தல்.
- சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு தரப்படாதது..
- காவிரி,முல்லைப்பெரியாறு விவகாரங்களில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை துச்சமெனத் தூக்கியெறிந்த கேரளா,கர்நாடகத்தின் போக்கைத் தட்டிக்கேட்காத மத்திய அரசு
மக்கள் சக்தி கட்சியின் அறிக்கை : பக்கம் 1 || பக்கம் 2
ஆர்ப்பாட்டம் குறித்த துண்டறிக்கை: பக்கம் 1 || பக்கம் 2
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள்
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள்
ஜனநாயக மரபுகளைக் காற்றில் பறக்கவிடும் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தின் அரசியல் கலாச்சாரம் சீரழிவின் உச்சத்திற்கு சென்றுவிட்டதை உணர்த்துகின்றன. அசுர பலத்தோடு நிற்கும் ஆதிக்கக் கட்சிகளின் அராஜகப் போக்கை எதிர்த்து யாரும் எதுவும் பேசமுடியாது என்று நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள் மக்கள். நமக்கேன் வம்பு என்று பொதுவிவகாரங்களில் கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்க்கிறார்கள். மக்களாட்சியில்,
பொதுமக்களின் விருப்பங்களும், ஜனநாயக உரிமைகளும் அரசியல் அரங்கில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறாக ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்படும் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். தனி மனித சுதந்திரத்தின் மீதும், ஜனநாயக உரிமைகள் மீதும் அக்கறை கொண்டோர் ஒன்றிணைவோம்.. மன்னராட்சியாய் மாறிவரும் ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்.
திரளட்டும் மக்கள் சக்தி ! மலரட்டும் புதிய தமிழ்ச்சமுதாயம் !!
நாள் & நேரம் : மார்ச் 07, 2010 - ஞாயிறு அன்று காலை 11 மணி
இடம் : மெமோரியல் ஹால் (சென்ட்ரல் அருகில்)


