
கொடியிலுள்ள நீலநிறம் பரந்த தன்மை, பலநதிகளை உள்ளடக்கும் ஆழ் கடலின் தன்மையைக் குறிக்கிறது. கொடியிலுள்ள வெள்ளைநிறம் தூய்மையையும்,வேற்றுமையில் ஒற்றுமையையும் குறிக்கிறது. ஜனநாயகத்தின் 5 முக்கிய அம்சங்களைக் குறிக்கும்விதமாக கொடியில் 5 முனையுள்ள நட்சத்திரம் உள்ளது. அவை சுதந்திரம், சுயாட்சி, மக்களை அதிகாரப்படுத்துதல், சட்டத்தின் ஆட்சி, காலத்திற்கேற்ற நிர்வாக மாற்றங்கள்
======================000==============================
மக்கள் சக்தி கட்சி 'லோக்சத்தா" கட்சியுடன் இணைவதற்கு முன்பு ( ஜூலை 25, 2009 முதல் ஜூன், 2010 வரை) இருந்த கொடி:
நீலம்
மேல் பாதியில் இருக்கும் நீல நிறம் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டோர் நலன், உண்மை, பரந்த மனப்பான்மை ஆகியவற்றைக் குறிக்கும்.
பச்சை
கீழ் பாதியில் இருக்கும் பச்சை நிறம் விவசாயத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் குறிக்கும்.
திறந்த புத்தகம்
இரு நிறத்திற்கும் மத்தியில் இருக்கும் திறந்த புத்தகம் கல்வியின் முக்கியத்துவத்தையும், அறிவார்ந்த அணுகுமுறையையும், அரசின் ‡ கட்சியின் வெளிப்படைத் தன்மையின் அவசியத்தையும் உணர்த்தும். புத்தகத்தில் இடம்பெற்றுள்ள திருக்குறள் தமிழ் மொழியின் மேன்மையைக் குறிக்கிறது.


