திருச்செந்தூர் இடைத்தேர்தலில் ம.ச.க - டிசம்பர் 2009
கடந்த ஆகஸ்ட்,2009 நடந்த பருகூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் முதன்முறையாக மக்கள் சக்தி கட்சி போட்டியிட்டது(விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன). தற்போது டிசம்பர் 19,2009 அன்று நடைபெறவுள்ள திருச்செந்தூர்(தூத்துக்குடி) சட்டமன்ற இடைத்தேர்தலிலும் ம.ச.க. போட்டியிடுகிறது.
நமது கட்சிக்கு பதிவு பெற்ற கட்சி என்ற அங்கீகாரம் பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு(டெல்லி) விண்ணப்பித்துள்ளோம். அது இன்னும் நிலுவையில் உள்ளதால் நமது வேட்பாளர் ம.ச.க.வின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

இத்தேர்தலில் நமது செயல்பாடுகள் குறித்த விவரங்கள் இப்பக்கத்தில் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.....
தேர்தல் பிரச்சாரம் - நன்கொடை, செலவு விவரம்
----------------- o o o ---------------
பருகூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் - ஆகஸ்ட் 2009
முதல் தேர்தல் இது
2009 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் தொகுதியில் மக்கள் சக்தி கட்சி போட்டியிட்டது. ம.ச.க.போட்டியிட்ட முதல் தேர்தல் இது.
புதிய வரலாறு படைக்கப்பட்டது
முதல் தேர்தலிலேயே சோதனையைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது எங்களுக்கு. வேட்புமனுவில் குறிப்பிட்டதொரு ஆவணம் இணைக்கப்படவில்லை என்று எங்கள் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த செய்தி பத்திரிகைகளுக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நாங்கள் சோர்ந்துவிடவில்லை. அந்த ஆவணம் இணைக்கத் தேவையில்லை என்று டெல்லி-தேர்தல் ஆணையத்திடம் போராடி,வாதிட்டு எங்கள் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ள வைத்தோம்.
"இதுவரை தள்ளுபடி செய்யப்பட்ட மனு ஒன்று மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தமிழகத்தில் வரலாறு இல்லை" என்று பருகூர் தொகுதி தேர்தல் அலுவலர்(ஆர்.டி.ஓ) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். எங்கள் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக் சான்று அளித்தார். இந்த செய்தி அனைத்து நாளிதழ்களிலும் முதல்பக்க செய்தியாக வெளியானது. மக்கள் சக்தி கட்சியின் வருங்கால வெற்றிகளுக்கு இது ஒரு முத்தாய்ப்பான முன்னோட்டமாய் அமைந்தது.
வேட்பாளர்:
எம்.ஏ(அரசியல்), எம்.ஏ(எம்.ஏ-இதழியலில்) பட்டங்களைப்பெற்றவரும் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினருமான சிவ இளங்கோவை வேட்பளராக நிறுத்தினோம். 15 நாட்கள் இரவு பகல் பாராமல் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு நேரிடையாகச் சென்று கட்சியின் கொள்கைகளை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தோம்.
தேர்தல் முடிவுகள்:
தேர்தல் ஆகஸ்ட் 18 அன்று நடைபெற்றது. ஆகட்ஸ் 21 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. மக்கள் சக்தி கட்சி 1985 வாக்குகள் பெற்றது. இது தேசியக்கட்சிகளான பா.ஜ.க(1482), இ.(1640)ஆகிய கட்சிகள் பெற்ற வாக்குகளைவிட அதிகம். இதிலிருந்து, புதிய கட்சியை, இளைஞர்களின் கட்சியை மக்கள் ஏற்க-ஆதரிக்க தயாராகத்தான் இருக்கிறார்கள் என்பது மீண்டும் உறுதியானது.
தேர்தல் செலவு:
இலட்சக்கணக்கில் பணம் செலவாகியிருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம்... எங்களின் மொத்த செலவே ரூ.44692. செலவு மொத்தமும் நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் கொடுத்த நன்கொடையின் மூலமே சமாளிக்கப்பட்டது.


